உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் மானாம்பதியில் அமைப்பு

மழைநீர் வடிகால்வாய் மானாம்பதியில் அமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, விசூர் ரோடு பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருவிலே தேங்கி வந்தது.இதனால், அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பின், ஊராட்சி நிர்வாக தீர்மானத்தின்படி, இரு மாதங்களுக்கு முன் 2024 --- 25 நிதி ஆண்டில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு மழைநீர் வடிகால்வாய் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ