மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
4 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
5 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
8 hour(s) ago
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெற்கு மாட வீதியில் பாஹீரதி, ஸ்ரீசாம்பவி என அழைக்கப்படும் கங்கையம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 114ம் ஆண்டு கோடை உற்சவம், கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் குளக்கரையில் அமைக்கப்பட்ட பூப்பந்தலில் அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டு வர்ணிப்பு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கங்கையம்மன் அடியார்கள் மற்றும் புண்ணியகோட்டீஸ்வரர் தெருவினர் இணைந்து செய்திருந்தனர்.
4 hour(s) ago
5 hour(s) ago
8 hour(s) ago