மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
18 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
18 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
18 hour(s) ago
சென்னை: சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அனுமதியுடன், இந்திய சதுரங்க கூட்டமைப்பு ஒத்துழைப்போடு, தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் அனந்தி செஸ் அகாடமி மற்றும் வியூகம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய சர்வதேச பிடே ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி, சென்னை, ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள ஜேப்பியார் பல்கலை அரங்கில், கடந்த 22ல் துவங்கி நேற்றுடன் முடிந்தது.இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட நாடு முழுதும் இருந்து 500 வீரர்கள் பங்கேற்றனர். 'ரேட்டிங், நான் ரேட்டிங்' மற்றும் 7 முதல் 15 வயதுக்கு உட்பட்டோரும் போட்டியில் பங்கேற்றனர்.பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம், தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் கட்டணமின்றி அளிக்கப்பட்டன. ஜேப்பியார் பல்கலை வேந்தர் ரெஜினா மற்றும் ஜேப்பியார் கல்விக் குழும இயக்குனர் மார்கரெட் ரெஜினா ஆகியோர், கடந்த 22ம் தேதி போட்டியை துவக்கி வைத்தனர்.மொத்தம் ஒன்பது சுற்றுகள் நடந்த போட்டியில், 8.5 புள்ளிகளுடன் தமிழக வீரர் அஸ்வின் சாய்ராம் முதலிடம் பிடித்தார். 7.5 புள்ளிகளுடன் ஜேப்பியார் பல்கலையை சேர்ந்த தமிழக வீரர் கிரண் இரண்டாம் இடம் பெற்றார்.மூன்றாவது இடத்தை 7.5 புள்ளிகளுடன் மற்றொரு தமிழக வீரர் அஜேஷ் பெற்றார். முதலிடம் பெற்றவருக்கு 75,000 ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு 50,000 ரூபாயும், மூன்றாம் இடத்திற்கு 35,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.தவிர, போட்டியில் நான்காம் இடம் முதல் 25வது இடம் வரை பெற்ற வீரர்கள் அனைவருக்கும், 20,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.மொத்த பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜேப்பியார் பல்கலை விளையாட்டுத் துறை டீன் ஓம்பிரகாஷ் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினார்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago