கார் மோதி வாலிபர் பலி
வாலாஜாபாத்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவின்குமார், 31. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து, அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்களான சதீஸ்குமார் 25 மற்றும் அன்பரசன் 23 ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். குருவிமலை சாலை பாலாற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த பொலிரோ கார் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த மூவரையும், அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், பிரவின்குமார் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மாகரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.