மழைநீர் வடிகால் பணி விபரம் கேட்டறிந்த கலெக்டர்
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம் கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பரணிபுத்துார், கொல்லச்சேரி ஊராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று நேரில் ஆய்வு செய்து பணிகளின் விபரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், எஞ்சியுள்ள பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கேடஷ், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.