மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
1 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
1 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
1 hour(s) ago
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையோரம் டேங்கர் லாரி ஒன்று, கழிவுநீரை ஊற்றிக் கொண்டிருந்தது. இதை பார்த்த காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, அந்த லாரியை பிடித்து, சோமங்கலம்போலீசாரிடம் ஒப்படைத்தார்.சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கிறிஸ்டோபர் மற்றும் ஓட்டுனர் தனுஷ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில், குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை, நீர்நிலை மற்றும் பொது இடத்தில் ஊற்றுவது அதிகரித்துள்ளது.படப்பை, மணிமங்கலம்ஊராட்சியில் எடுக்கப்படும் கழிவுநீரை, மணிமங்கலம், ஆதனஞ்சேரி, சிறுமாத்துார் ஏரிகளில் கொட்டி அட்டூழியம்செய்கின்றனர். போலீசார், இதை கண்டுக்கொள்வதே இல்லை.நீர்நிலை மற்றும் பொது இடங்களில் கழிவுநீரை ஊற்றும் லாரிகளை பிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago