உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிணற்றில் மூழ்கி காவலர் பலி

கிணற்றில் மூழ்கி காவலர் பலி

படப்பை:திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ்குமார், 24. பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில், தமிழக போலீஸ் படை பட்டாலியன் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். தாம்பரத்தில் தங்கி, டேக்வாண்டோ தற்காப்பு பயிறசியும் மேற்கொண்டு வந்தார். தாம்பரம் அடுத்த எட்டியாபுரத்தில் உள்ள கிணற்றில், நண்பர்களுடன் நேற்று குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனுஷ்குமார் நீரில் மூழ்கி பலியானார்.சோமங்கலம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ