சுங்குவார்சத்திரத்தில் உள்வாங்கியது சாலை
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலை உள்ளது. அரசு, தனியார் பேருந்துகள், தொழிற்சாலைகளுக்கான கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் இந்த சாலையில், சுங்குவார்சத்திரம் சந்திப்பு அருகே, சாலை உள்ளவாங்கிஉள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகள், உள்வாங்கிய சாலையின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாகஇடறி விழுந்து கனரகவாகனங்கில் மோதிவிபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவுநேரங்களில் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையின்சாலை உள்வாங்கிய இடத்தை சமன் செய்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.