உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருங்காட்டுக்கோட்டையில் இதுதான் மழைநீர் வடிகால்வாய்

இருங்காட்டுக்கோட்டையில் இதுதான் மழைநீர் வடிகால்வாய்

இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்த பின் இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மன்றம் பின்புறம் உள்ள பஜனை கோவில் தெருவில் ஒராண்டுக்கு முன், சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலை அமைத்த பின், சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் பக்கவாட்டில் அழுத்தம் ஏற்பட்டு, கால்வாயின் இருபுறம் உள்ள சிமென்ட் தடுப்புக்கள் ஒன்றை ஒன்று ஓட்டி கொள்ளும் வகையில் உள்ளது.இந்த கால்வாய் வழியே மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. வடக்கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், இந்த வடிகால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை