உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்பனை செய்த இருவர் சிக்கினர்

குட்கா விற்பனை செய்த இருவர் சிக்கினர்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள கடைகளில், காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீசார், நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதில், 10 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு 30,000 ரூபாய். இவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் ஜியாவுதீன், 41, என்பவரை கைது செய்தனர்.அதேபோல், வாரணவாசி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், 30,000 மதிப்புள்ள 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் பாபு, 27, என்பரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை