உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலரில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

டூ - வீலரில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

ஸ்ரீபெரும்புதுார்:அம்பத்துாரைச் சேர்ந்தவர் விக்ரமன், 30, இவரது மனைவி சினேகா, 22. இவர், நேற்று காலை, மண்ணிவாக்கத்தில் உள்ள தாய் ராணி, 55, உடன், சுங்குவார்சத்திரம் அடுத்து காந்துார் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' டூ - வீலரில் சென்றார்.சுங்குவார்சத்திரம் -- மதுரமங்கலம் சாலையில், சோகண்டி பொன்னியம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, சினேகா ஓட்டிவந்த டூ - வீலர் மீது மோதியது.இதில், பின்னால் அமர்ந்திருந்த ராணி நிலை தடுமாறி விழுந்ததில், அதே லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதிர்ஷ்டவசமாக சினேகா உயிர் தப்பினார். சுங்குவார்சத்திரம் போலீசார், ராணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை