மேலும் செய்திகள்
புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
21 hour(s) ago
கீழ்வீதி கோவில் குளத்திற்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
21 hour(s) ago
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
21 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் புதிய ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும், அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வரை 'பாசஞ்சர்' ரயிலும், மும்பை - நாகர்கோவில் இடையே வாராந்திர விரைவு ரயிலும் இயக்கப்படுகிறது.தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் பயணிக்கின்றனர். பாசஞ்சர் ரயிலுக்கு டிக்கெட் வழங்கும் அலுவலகம் அருகில், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் குறித்து ரயில்வே கால அட்டவணையும், அதேபோல காஞ்சிபுரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் செல்ல டிக்கெட் கட்டணம் குறித்த தகவல் பலகையும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனால், தமிழ் மட்டும் தெரிந்த ரயில் பயணியர், எந்த ரயில், எங்கிருந்து புறப்பட்டு எப்போது காஞ்சிபுரம் வருகிறது. அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டு எந்த ஊருக்கு செல்கிறது என்பதை அறிந்துகொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, டிக்கெட் வழங்கும் அலுவலகம் அருகில், ஆங்கிலத்தில் உள்ளதைப் போன்று, ரயில் வந்து செல்லும் நேரம் குறித்து ரயில் கால அட்டவணை மற்றும் ரயில் டிக்கெட் கட்டண விபரம் தகவல் பலகை தமிழில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago