உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண்தான விழிப்புணர்வு காஞ்சியில் மனிதசங்கிலி

கண்தான விழிப்புணர்வு காஞ்சியில் மனிதசங்கிலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, சங்கர் கண் வங்கி, சங்கரா செவிலியர் கல்லுாரி மற்றும் அரிமா சங்கம் சார்பில், கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் கொடியசைத்து கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலியை துவக்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.எம். சங்கரன், அரிமா மாவட்ட ஆளுனர் எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள், கண்தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். சங்கரா செவிலியர் கல்லூரி மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கண்தான உறுதிமொழி படிவத்தை ஆர்வமுடன் பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.கண்தான அரிமா மாவட்ட தலைவர் பகவத்கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவாக சங்கர் கண் வங்கி செயலர் சரோஜா சங்கரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !