மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம்
18-Aug-2024
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், கண் தான இருவார விழா, விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழாமற்றும் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர்டாக்டர் மனோகரன்வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், காஞ்சிபுரம் மாவட்ட தொழுநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர்கனிமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராகபங்கேற்றனர். சமீபத்தில் நடந்த பல்வேறு விழாவில் விருது பெற்ற மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமங்களின் சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் டாக்டர் பி.விஜயசங்கர், அசைவு குறைபாடு நோய்களுக்கான சிகிச்சையில் சமீபத்திய கண்டு பிடிப்புகள்' என்ற தலைப்பிலும், டாக்டர் ஏ.சங்கமேஸ்வரன், ஜீரண மண்டல மருத்துவ இயலில் அண்மைய முன்னேற்றங்கள்' என்ற தலைப்பிலும், டாக்டர் கே.ஹரீஷ்குமார் புற்றுநோய் விழிப்புணர்வு-ஆற்றல் நம் கைகளில்' என்ற தலைப்பிலும்உரையாற்றினர்.
18-Aug-2024