உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்குவரத்து வசதியில்லாததால் அவதிப்படும் தொழிலாளர்கள்

போக்குவரத்து வசதியில்லாததால் அவதிப்படும் தொழிலாளர்கள்

உத்திரமேரூர், : உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், 40,000 பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை அதிகமான இப்பகுதியில், வேலைவாய்ப்புக்கான வசதிகள் குறைவாகவே உள்ளது.உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பல கி.மீ., துாரத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளுக்கு வேலை தேடி அலைய வேண்டி உள்ளது.சென்னை புறநகரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 'ஷிப்ட்' முறையில் பணி என்பதால், இரவுநேர பணிக்கு போதிய போக்குவரத்து இல்லாமல் இப்பகுதி தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.இதேபோன்று, சாலவாக்கத்தைச் சுற்றி உள்ள கிராம இளைஞர்கள், தொழிற்சாலைகள் இல்லாததால் வேலைவாய்ப்பு வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.அங்குள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரகடம் அல்லது ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.ஒரகடம் அல்லது ஸ்ரீபெரும்புதுார் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லை. இதனால், அப்பகுதி இளைஞர்களும் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, உத்திரமேரூர் பகுதிகளில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்தும் வகையில், தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vellingiri C
ஜூலை 09, 2024 23:08

தமிழ் நாடு முழுவதும் இந்த போக்குவரத்து பிரச்சனை உள்ளது.போக்குவரத்து .டிரைவர்.கண்டக்டர்.நலன் கருதி,அவர்கள் பணியில் அக்கறையில்லாமல் ,பொதுநலன் கருதாமல் சுயநலமாக செயல்படுகிறார்கள் .அரசுக்கு பொதுமக்கள்மீது கவலையில்லை .


மேலும் செய்திகள்







புதிய வீடியோ