உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண் டப்பிங் கலைஞரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

பெண் டப்பிங் கலைஞரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர், 25 வயது இளம்பெண்; டப்பிங் கலைஞர். கடந்த 27ம் தேதி, இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். தன் வீடு அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில், பொதுவான கேட் பூட்டப்பட்டிருந்ததை கண்டு, கீழ் வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் கேட்டை திறக்குமாறு கூறினார்.உடனே, கீழ் வீட்டில் உள்ள பெண்ணின் கணவர் ஜெய்கர், 27, என்பவர், இளம்பெண்ணிடம் தாமதமாக வருவது குறித்து கேட்டு, அவதுாறாக பேசி, கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து விருகம்பாக்கம் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஜெய்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி