உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

ஸ்ரீபெரும்புதுார், : கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனந்து, 21; இருங்காட்டுக்கோட்டை அடுத்த, மேவலுார்குப்பத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தண்டலம் பகுதியில் உள்ள பெருமாங்களணி குளத்தில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது, அனந்து திடீரென குளத்தில் மூழ்கி மாயமானார்.இதையடுத்து நண்பர்கள் குளத்தில் தேடியும் கிடைக்காத நிலையில், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய அனந்துவின் உடலை மீட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார், அனந்துவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை