காஞ்சிபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளில், காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில் பணிநடக்கும் என, அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், 14 கோவில்கள் திருப்பணிக்காக காத்திருக்கின்றன.தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மேற்கொள்ள இருக்கும் அடிப்படை வசதிகள், திருப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, 2023 ஏப்ரல் மாதம் சட்டசபை மானிய கோரிக்கையில், அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.இதையடுத்து, அமைச்சர்அறிவித்த பல்வேறு அறிவிப்புகளில், கோவில் திருப்பணிகள் இன்னும் துவக்காமலேயே இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என தொடர்ச்சி 4ம் பக்கம்அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கோவிலில் நடைபெறவுள்ள திருப்பணிகள் பற்றிய மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், பல கோவில்களில் டெண்டர் பணிகள் கூட இன்னும் துவங்காமல் உள்ளது. மேலும், பல கோவில்களில் திருப்பணிகள், குளம் சீரமைப்பு நடைபெறுவதற்கான பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது. சட்டசபை அறிவிப்புகளில் இளையனார்வேலுார், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் பாலாலயம் நடந்து, திருப்பணிகள் துவங்கி உள்ளன. அதேபோல், கச்சபேஸ்வரர் கோவில் தேர்க்கொட்டகை அமைக்கும் பணிகள் மட்டும் சமீபத்தில் நடந்தது. ஆனால், மாவட்டத்தின் பெரிய கோவில்களில் அறிவிக்கப்பட்ட திருப்பணிகள் எப்போது துவங்கும் என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.சட்டசபையில் அறிவிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற காத்திருக்கும் கோவில்கள்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோவிலுக்கு, 7 கோடியில் திருப்பணி ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட அகத்தீஸ்வரர் மற்றும்திருவாலீஸ்வரர் கோவில்களுக்கு, தலா 2 கோடி ரூபாய் மதிப்பில் பணி ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தலா 2 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் புதிய திருமண மண்டபம் கட்டப்படும். தமிழகத்தில் 32 கோவில்களில் உள்ள திருக்குளங்கள், 10.04 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலின் குளமும், காஞ்சிபுரம்குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களின் குளமும் சீரமைக்கப்படும். தமிழகத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான 40 கோவில்கள், 21 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் இடம் பெற்றுள்ளது.இதுகுறித்து, குமரகோட்டம் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், “பிப்ரவரி மாத இறுதியில், குமரகோட்டம் கோவிலில் திருப்பணி துவங்க உள்ளது” என்றார்.வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறவுள்ள பணிகள் குறித்து மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அனுமதி பெற்றவுடன், 'டெண்டர்' விட்டு பணிகள் துவங்கும்.- சீனிவாசன்,வரதராஜ பெருமாள் கோவில் உதவி கமிஷனர்,காஞ்சிபுரம்.இதுகுறித்து, வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், “வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டப பணிகள் ஓரிரு மாதங்களில் துவங்கப்படும். அதேபோல், செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோவில் திருப்பணியும் விரைவில் துவங்கும்.- செந்தில்குமார்,சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், வல்லக்கோட்டை.
8 பழமையான கோவில்களில் திருப்பணிகள் எப்போது?
தமிழகத்தில் 698 கோவில்கள், 250 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 பழமையான கோவில்களில் திருப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 13 கோவில்களில் திருப்பணிகள் துவங்கிய நிலையில், கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவில், காஞ்சிபுரம் குமரகோட்டம்சுப்பிரமணிய சுவாமி கோவில், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை ஓணகாந்தீஸ்வரர் கோவில், ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில், காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி நகரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் ஐயனாரப்பன் கோவில் ஆகிய 8 கோவில்களில் திருப்பணிகள் எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.