கலியாம்பூண்டி நிவாரண முகாமில் மழைக்காக 15 பேர் தங்கவைப்பு
உத்திரமேரூர்,:'பெஞ்சல்' புயலால் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று,இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, கலியாம்பூண்டி மற்றும் ராவத்தநல்லூர் பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 15 பேர் மீட்கப்பட்டு, கலியாம்பூண்டி மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் இயங்கிவரும், மழை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு தேவையான உணவு, போர்வை ஆகியவை, ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அவர்கள் வெளியே செல்லாதபடிக்கு தொடர் கண்காணிப்பில்,இருந்து வருவதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.