பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது
மணிமங்கலம்: பாலியல் தொழில் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். குன்றத்துார் அருகே, மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிமங்கலம் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒரு வீட்டில், மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த அம்பத்துாரைச் சேர்ந்த பிரசாந்த், 32, சபரிஷ், 23, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மூன்று பெண்களை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர்.