உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 பெருமாள் கோவில் நிர்வாகம் அறநிலையத்துறை வசம் வந்தன

2 பெருமாள் கோவில் நிர்வாகம் அறநிலையத்துறை வசம் வந்தன

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், காலண்டர் தெருவில், பழமை வாய்ந்த பச்சை வண்ணர் பெருமாள் மற்றும் பிரவள வண்ணர் எனும் பவள வண்ணர் கோவில்கள் உள்ளன.இரு கோவில்களும், 108 திவ்ய தேசங்களில், 55வது திவ்ய தேசம் என அழைக்கப்படுகிறது. இதற்கு, பரம்பரை அறங்காவலராக பாலாஜி என்பவரின் மனைவி ஆதிலட்சுமி பதவி வகித்து வந்தார். பல ஆண்டுகளாக, இக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தவிர, நிர்வாக குளறுபடி, கோவில், குளம் பராமரிப்பின்றி அலங்கோலமாக காணப்பட்டது.இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தின் மீது, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் வான்மதி, இரு கோவில்களிலும் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, கோவிலை முறையாக பராமரிக்காத பரம்பரை அறங்காவலரை தகுதி நீக்கம் செய்தார்.இந்நிலையில், அறநிலையத் துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன் தலைமையிலான அதிகாரிகள், கோவிலுக்கு நேற்று சென்றனர்.பின், அறங்காவலரிடம் இருந்து இரு கோவில்களின் சாவிகளை வாங்கி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலரான தியாகராஜனிடம் ஒப்படைத்தனர்.லட்சுமிகாந்தன் பாரதிதாசன் கூறுகையில், ''மீட்கப்பட்ட இரு கோவில்களுக்கும், தற்காலிக தக்காராக தியாகராஜன் செயல்படுவார். கோவிலுக்கு தேவையான வசதிகள் பட்டியலிடப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை