உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் ஓடும் மஞ்சள்நீர் கால்வாய் அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரு வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன், 21, மற்றும் சிவா, 19, என, தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை