உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீலாங்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய 20 ஆமைகள்

நீலாங்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய 20 ஆமைகள்

சென்னை : ஆண்டுதோறும், நவ., முதல் மார்ச் வரை, கடலோர பகுதிகளில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்லும். இதற்காக, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், முட்டை பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.இரண்டு மாதங்களாக முட்டையிட கடற்கரை வரும் பல ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன.

7 கி.மீ., துாரம்

கடந்த மாதம் இறுதியில், நீலாங்கரை, பனையூர் கடற்கரையில் ஒரே நாளில், 15 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. பின், ஒன்று, இரண்டு ஆமைகள் கரை ஒதுங்கின.இந்நிலையில் நேற்று காலை, பாலவாக்கம் முதல் பனையூர் வரை உள்ள கடற்கரையில், 7 கி.மீ., துாரத்தில், 20 இறந்த ஆமைகள், வரிசையாக கரை ஒதுங்கி கிடந்தன. இவற்றை, 'ட்ரீ' அமைப்பினர், வனத்துறை உதவியுடன் மணல் தோண்டி புதைத்தனர்.

எதனால்?

திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை, 100க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. கடலோர பகுதிகளில், 9.26 கி.மீ., தொலைவு வரை இழுவை மடி வலையில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.எனினும், மீனவர்கள் இவ்வகை வலைகளை பயன்படுத்துவதால், அவற்றில் சிக்கி ஆமைகள் இறப்பதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.தொடர்ந்து ஆமைகள் இறப்பதால், கடல் வளம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆமைகள் இறப்பை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை