மேலும் செய்திகள்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
10-Sep-2025
வாலாஜாபாத்:கல்வி கற்பித்தலை கவுரவிக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத்தில் நடைபெற்றது. வாலாஜாபாத் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா வாலாஜாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி, ஏற்கனவே வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் குறித்து அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதன்படி, கற்றல் முறையை புதுமையாக கையாளுதல் மற்றும் மாணவ - மாணவியர் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்துதல் என, சிறப்பாக செயல்பட்ட 26 அரசு பள்ளி ஆசிரியர்கள் விழாவிற்கு வரவைக்கப்பட்டனர். லயன்ஸ் மாவட்ட துணை ஆளுநர் பூர்ணசந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்து பேசி அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டி கவுரவித்தார். லயன்ஸ் மாவட்ட தலைவர் சசிகுமார், சங்க தலைவர் தனராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Sep-2025