உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புஞ்சையரசந்தாங்கலில் 26 சவரன் நகை திருட்டு

புஞ்சையரசந்தாங்கலில் 26 சவரன் நகை திருட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தைச்சேர்ந்தவர் தாஸ் பிரகாஷ், 40, எலக்ட்ரீஷியன்.இவர், குடும்பத்துடன் நேற்று முன் தினம் இரவு மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் முடித்து, வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கிரில் கேட் உடைத்து, பீரோவில் இருந்த, 26 சவரன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், 30,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. தகவல் அறிந்த, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை