கஞ்சா விற்ற 3 பேர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள பாலம் கீழ், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில், போலீசார் சில நாட்களாகவே ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, அங்கு ரோந்து செய்தபோது, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நின்றிருந்தனர்.அவர்களை பிடித்து விசாரித்ததில், விற்பனை செய்ய அவர்களிடம் 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுமத்கோப், 32, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரக் கார்த்தி, 24, மற்றும் 16 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.