ஜமாபந்தி முகாமில் 3,708 பேர் மனு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆண்டுதோறும் வருவாய் துறை சார்பில், நடப்பாண்டுக்கான ஜமாபந்தி முகாம், மே 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை நடத்தப்பட்டது.வருவாய் துறை கணக்கீடுகள், பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மீதும் இந்த ஆய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு தாலுகாவிற்கும் வருவாய் தீர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.காஞ்சிபுரம் தாலுகாவிற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜியும், உத்திரமேரூர் தாலுகாவிற்கு கலெக்டர் கலைச்செல்வியும், வாலாஜாபாத்திற்கு காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலியும், ஸ்ரீபெரும்புதுாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷூம், குன்றத்துார் தாலுகாவிற்கு ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டர் மிருணாளியும் நியமிக்கப்பட்டனர்.இம்முகாமில், பட்டா, வீட்டு மனு உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 3,708 பேர், ஐந்து தாலுகாக்களிலும் மனு அளித்துள்ளனர்.உத்திரமேரூர் தாலுகாவில் 735 பேரும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் 789 பேரும், வாலாஜாபாத் தாலுகாவில் 492 பேரும், குன்றத்துார் தாலுகாவில் 851 பேரும், காஞ்சிபுரம் தாலுகாவில் 841 பேரும் மனு அளித்துள்ளனர்.