மேலும் செய்திகள்
ஒரே ஊராட்சியில் அருகருகே இரண்டு அங்கன்வாடி மையம்
11-Aug-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், 46 உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன. உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 186 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்கன்வாடி மையங்களில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது, முன் பருவ கல்வி கற்பிப்பது, கர்ப்பிணியரின் நலனை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 167 உதவியாளர் பணியிடங்களில், 46 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உதவியாளர் இல்லாத அங்கன்வாடி மையங்களில், விரைந்து பணியாளர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்திரமேரூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா கூறியதாவது: உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 186 அங்கன்வாடி மையங்களில், 46 அங்கன்வாடி மையங்களில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, மூன்று உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வுகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள, 43 அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
11-Aug-2025