மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
18-Nov-2024
கஞ்சா விற்றதாக வாலிபர்கள் கைது
14-Nov-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அன்படி, நேற்று முன்தினம், வல்லம் கிராமத்தில் உள்ள தனியார் விடுதி அருகே, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.விசாரணையில் அவர்கள், வல்லம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டவன், 23, சாமுவேல், 20, தனுஷ், 21, சஞ்சய், 20, மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சன் பால், 23 என்பதும் தெரியவந்தது.கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சன் பாலுடன் சேர்ந்து, மேற்குவங்கத்தில் இருந்த, 10 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த வடமாநில இளைஞர்களிடம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
18-Nov-2024
14-Nov-2024