மேலும் செய்திகள்
இந்து மக்கள் கட்சியினர் கைது
18-Nov-2024
காஞ்சிபுரம்:தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தரக்குறைவாக பேசியதாக கூறி, பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட செயலர் மகேஷ்குமார் தலைமையில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே நேற்று பா.ம.க.,வினர் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ம.க.,வினர் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பா.ம.க.,- - எம்.எல்.ஏ., சக்தி கமலம்மாள், மாவட்ட தலைவர் உமாபதி, நகர செயலர் பூபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 2 பெண்கள் உட்பட மொத்தம் 67 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கட்சியினர், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின், கைது செய்யப்பட்டவர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
18-Nov-2024