உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய வில் வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற 7 மாணவ -- மாணவியர்

தேசிய வில் வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற 7 மாணவ -- மாணவியர்

வாலாஜாபாத்: திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாடு பாரம்பரிய வில் வித்தை சங்கம் சார்பில் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கும் மாநில அளவிலான வில் வித்தை போட்டி, திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இருந்து, 320 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி குழுவினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் ஒருங்கிணைப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் அஜ்மல் மற்றும் 7ம் வகுப்பு மாணவர் தனுஷ்; நாய்க்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் வினிஷ்; வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் அஸ்வத்குமார்; ஜென்ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் மாணவர் ஜீவேஸ்வர். வாலாஜாபாத் டி.எஸ்.எஸ்., நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி ரித்திகா மற்றும் குன்னம் ஜேப்பியார் கல்லுாரி பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு மாணவி நவஷினி ஆகியோர் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று, புதுடில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான வில் வித்தை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி