உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் 76வது ஆண்டு குடியரசு தின விழா கோலாகலம் ரூ.76.76 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

காஞ்சிபுரத்தில் 76வது ஆண்டு குடியரசு தின விழா கோலாகலம் ரூ.76.76 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில், 76வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காலை 8:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.தொடர்ந்து, காவல், வருவாய், மருத்துவம் உள்ளிட்ட பல துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், எட்டு பேருக்கு பெட்ரோலில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள்.முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்வி உதவித்தொகை என, 29 பேருக்கு, 76.76 லட்சம் ரூபாய் செலவில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதையடுத்து, உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதி தனியார் பள்ளிகளின் மாணவ- - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.இதில், பங்கேற்ற மாணவ - -மாணவியருக்கு நினைவு கேடயங்களை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். விருது பெற்றவர்கள் மற்றும் காவல் துறையினர் கலெக்டருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இவ்விழாவில், காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இருக்கை ஒதுக்குவதில் சொதப்பல்

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மைதான கூட்ட அரங்கின் முன்வரிசையில், பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் அளிப்பது வழக்கமாக இருந்தது. நேற்று, கூட்ட அரங்கு முன்வரிசையில் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை வழங்கப்படவில்லை. மாறாக, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகளின் உறவினர்கள் மட்டுமே, முன்வரிசையில் அமர இருக்கை ஒதுக்கீடு செய்திருந்தனர்.

ரூ.76.76 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவி!

துறைகள் பயனாளிகள் நிதி ஒதுக்கீடுமுன்னாள் படைவீரர் நலம் 3 கல்வி உதவி தொகை, ரூ.80,000 மாற்றுத்திறனாளிகள் நலம் 8 பெட்ரோல் வாகனம், ரூ.8.24 லட்சம் ஊரக வளர்ச்சி துறை 3 மகளிர் குழு கடனுதவி, ரூ.60,000 ஆதிதிராவிடர் நலன் 6 தையல், சலவை இயந்திரம், ரூ.41,000சமூக நலத்துறை 3 பெண் குழந்தை பாதுகாப்பு, ரூ. 1.50 லட்சம்வேளாண் பொறியில் துறை 2 இயந்திரங்கள், ரூ.3.80 லட்சம்தோட்டக்கலை துறை 2 இடுபொருட்கள்,ரூ.1.80 லட்சம் வேளாண்துறை 2 இடு பொருட்கள், ரூ.21,000 மொத்தம் 29 ரூ.76.76 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !