உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

தடுப்பு சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 54; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 22ம் தேதி, உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, மல்லிகாபுரம் அருகே சாலையோர தரைபால தடுப்புச்சுவரில் மதுபோதையில் படுத்து தூங்கியுள்ளார்.அப்போது, தடுப்புச்சுவரில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, உத்திரமேரூர் வட்டார அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை