உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடு கட்டும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை

மாடு கட்டும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை

உத்திரமேரூர்:வேடபாளையம் நிழற்குடையில் மாடுகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் - அரசாணிமங்கலம் சாலை, வேடபாளையம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இதை பயன்படுத்தி அப் பகுதி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து பிடித்து சென்றனர். தற்போது, பேரூராட்சி நிர்வாகம் பயணியர் நிழற்குடையை முறையாக பராமரிக்காமல் உள்ளது. சிலர் பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து மாடுகளை கட்டி வருகின்றனர். மாடுகள் கட்டுவதால் மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நின்றபடியே பேருந்து பிடித்து செல்கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் அமர இடமில்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நிழற்குடையில் மாடுகள் கட்டுவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை