உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலரில் சென்றவர் லாரி மோதி பரிதாப பலி

டூ - வீலரில் சென்றவர் லாரி மோதி பரிதாப பலி

செய்யூர் : செய்யூர் அருகே நெட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையின் மகன் சதீஷ், 23. மொபைல் சிம் கார்டுகள் விற்பனை செய்யும் பணி செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, வேலை முடிந்து, செய்யூரில் இருந்து, 'டியோ' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.மேற்கு செய்யூர் அருகே சென்ற போது, முன்னே சென்ற லாரி, பிரேக் பிடித்ததால், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, அப்பகுதிமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரி மற்றும் சாலையில் சென்ற மற்ற இரண்டு லாரிகளை மடக்கி கண்ணாடியை உடைத்தனர்.இது குறித்து, சம்பவ இடத்திற்கு சென்ற செய்யூர் போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.பின், வழக்குப்பதிந்து உடலைக் கைப்பற்றிய போலீசார், சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்தியலாரியை பறிமுதல் செய்து, சிதம்பரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயபிரகாஷ், 28, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி