உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியலால் விபத்து அபாயம்

திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியலால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே, பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தோர் இந்த பாலத்தை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், திருமுக்கூடலை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும், குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயக்கப்படும், கனரக வாகனங்கள் பாலாற்று பாலத்தின் வழியே செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.அவ்வாறு பாலத்தின் மீது ஜல்லி, எம் - சான்ட் ஆகியவை ஏற்றிக் கொண்டு, லாரிகள் செல்லும்போது தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன. அப்போது, லாரிகளில் இருந்து கீழே விழும் எம் - சான்ட் மண் பாலத்தின் ஓரத்திலே குவியலாக சேர்கிறது.இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாலத்தில் குவிந்துள்ள மண்ணால் நிலைத்தடுமாறி, விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.ஆறு மாதமாக பாலத்தின் மீது குவிந்துள்ள மண்ணை அகற்றாமல், நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, திருமுக்கூடல் பாலாற்று பாலத்தின் ஓரத்தில் குவிந்துள்ள, மண் குவியலை அகற்ற, துறை அதிகாரிகளுக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை