சங்கரா கலை கல்லுாரியில் கணக்கியல் வகுப்பு துவக்கம்
ஏனாத்துார், காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான தொழில்முறை சார்ந்த கணக்கியல் கல்விக்கான, பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் வகுப்பு துவக்க விழா, வணிகவியல் துறை சார்பில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், மாணவர்களுக்கு பாடப் புத்தகங் களை வழங்கி, பாடத் திட்டத்தின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் மாணவர்களின் தொழில் வாய்ப்பு பற்றி பேசினார். வணிகவியல் துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.