மேலும் செய்திகள்
மெதுார் பர்வதீஸ்வரர் கோவில் திருப்பணிகள் மந்தம்
01-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், அகத்தியர் ஈசனை வழிபட்டதாக கூறப்படுகிறது.தற்போது, இக்கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமல், கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரம், தனி சன்னிதிகள், பலி பீடம் ஆகியவை சேதமடைந்து உள்ளது.கோவில் மண்டபம் இடிந்து விழுந்து, தூண்கள் மட்டுமே உள்ளன. மேலும், நுழைவாயில் கோபுரம் சிதிலமடைந்தும் உள்ளது. எனவே, சேதமடைந்து வரும் கோவிலை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:சிதிலமடைந்து வரும் அகத்தீஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.முறையாக நிதி ஒதுக்கீடு செய்தபின் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
01-Mar-2025