மேலும் செய்திகள்
மீண்டும் கட்சி பணி ஸ்டாலின் சுறுசுறுப்பு
03-Aug-2025
ஸ்ரீபெரும்புதுார்:அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை இன்று, காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் மேற்கொள்கிறார். அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என, சட்டசபை தொகுதி வாரியாக பிரசார பயணம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வரும் பழனிசாமி, காஞ்சிபுரத்தில், குமரக்கோட்டம் கோவில் அருகில் மாலை 5.00 மணிக்கு பேசுகிறார். இதை தொடர்ந்து, உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், மாலை 6.30 மணிக்கும், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இரவு 8.00 மணிக்கும் பேசுகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் பழனிசாமிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம் தலைமையில் அக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், அமைப்பு செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையிலும், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், குன்றத்துார் ஒன்றிய செயலருமான மதனந்தபுரம் கே.பழனி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலர் போந்துார் எஸ்.செந்தில்ராஜன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
03-Aug-2025