உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 12 வகையான பணிகளுக்கு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு

12 வகையான பணிகளுக்கு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, சமீப நாட்களுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்ந்துது. சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், உள்ளூர் மக்கள் என, ஸ்ரீபெரும்புதுாரின் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.ஆனால், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால், நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவ்வப்போது, பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், நகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், சாலை, மழைநீர் வடிகால் அமைப்பது போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன.அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் பஜனை கோவில் பிரதான சாலை பகுதியில், சிமென்ட் கல் சாலை அமைப்பது, குலசேகர பெருமாள் கோவில் தெருவில் சிமென்ட் கல் சாலை அமைப்பது, திருமங்கையாழ்வார் தெரு சுடுகாடு சுற்றுச்சுவர் அமைப்பது, பூதேரிபண்டை பிள்ளையார் கோவில் தெருவில் மூடிய பலகையுடன் மழைநீர் வடிகால் அமைப்பது என, 12 வகையான பணிகள், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், 1.8 கோடி ரூபாய், பொது நிதியில் இருந்து மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி