உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 2004ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். அதில், முன்னாள் மாணவர்கள் பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !