உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை நடுவே இடையூறாக உள்ள மின்கம்பம்

சாலை நடுவே இடையூறாக உள்ள மின்கம்பம்

காஞ்சிபுரம்:போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை, இடமாற்றம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை வேளிங்கபட்டரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், அரசு நகர் நுழைவாயில் பகுதியில், மின்கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் உள்ளது. இதனால், அரசு நகருக்கு செல்லும் வாகனங்கள் சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ