உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் இடத்தில் அங்கன்வாடி மையம் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

கோவில் இடத்தில் அங்கன்வாடி மையம் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர்கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.இதில், பட்டா, உதவித் தொகை, ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை, பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 568 பேர் மனுக்களை வழங்கினர்.மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.கூட்டத்தில், உத்திர மேரூர் பகுதியில் மாரியம்மன் கோவில் இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க ஆட்சேபனை தெரிவித்து அப்பகுதியினர் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப் பதாவது:உத்திரமேரூர் டவுன், 1வது வார்டில், ஆணைப்பள்ளம் பகுதியில், வருவாய் துறை ஆவணங்களின்படி மாரியம்மன் கோவில் என்றே பதிவாகியுள்ளது. இங்கு, பக்தர்கள் பொங்கல் வைப்பது, திருவிழா நடத்துவது போன்றவைக்கு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருகிறோம்.இங்கு, எவ்வித அறிவிப்பும் இன்றி, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அங்கன்வாடி மையம் அமைக்க ஏற்பாடு நடைபெறுவதால், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.அங்கன்வாடி மையம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை