ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம்: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப் பதிவாளர் யோகா விஷ்ணு தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊழல் தொடர்பான குற்ற வழக்குகள் குறித்து எடுத்துரைத்தார். லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கூட்டுறவு துறையினர் பங்கேற்றனர்.