மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை குடியிருப்புகள் பாழ்
28-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி நேர்முக உதவியாளராக கோபி என்பவர் பணிபுரிந்து வந்தார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால், அந்த பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, ஊரக வளர்ச்சி தணிக்கை அலுவலர் உமாசங்கர் என்பவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த காலி பணி இடத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி தணிக்கை அலுவலராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவரை, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளராக, அத்துறை நிர்வாகம் நியமித்து உள்ளது.அவர் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என, துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
28-Apr-2025