உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் தொழிற் பழகுநர் மேளா

வாலாஜாபாதில் தொழிற் பழகுநர் மேளா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 13ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் மேளா நடக்கிறது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைசெல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு வரை படித்த, இடைநின்ற, 10ம் வகுப்பு வரை படித்த, இடைநின்ற மற்றும் பிளஸ் 2வரை படித்த, இடைநின்ற மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 044- 29894560 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை