மேலும் செய்திகள்
பைக் திருட்டு
15-Mar-2025
கும்மிடிப்பூண்டி,ஆரணி அடுத்த சின்னம்பேடு பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 30. இவர், நேற்று முன்தினம் காலை, சின்னம்பேடு ஏரிக்கரையோரம், தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து ஆரணி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:சின்னம்பேடு பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 30. இவரது கணவர் கடந்த 2013ல் பாம்பு கடித்து உயிரிழந்தார்.அதன் பின், மஞ்சுளாவிற்கு சங்கருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசியுள்ளனர். இது தொடர்பாக மஞ்சுளாவின் உறவினரான தயாளன், 24, கேட்டுள்ளார்.அப்போது கள்ளத்தொடர்பை மறைந்த மஞ்சுளா, தன்னை உல்லாசமாக இருக்க அழைத்து, மொபைல்போனில் சங்கர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த தயாளன், கடந்த 29ம் தேதி காலை, ஏரிக்கரைக்கு செல்லும்போது சங்கரை பின்தொடர்ந்துள்ளார்.அங்கு இரும்பு ராடால் இருமுறை சங்கரின் தலையில் அடித்துள்ளார். இதில், சங்கர் சம்பவ இடத்திலே உயிரிழந்தது தெரிய வந்தது.இதையடுத்து, கள்ளத்தொடர்பை மறைத்து கொலை செய்ய துாண்டிய மஞ்சுளா, இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தயாளன் ஆகியோர் மீது ஆரணி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.
15-Mar-2025