உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அல்லாபாத் ஏரி பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏரி பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணி செய்து வந்தனர். இந்நிலையில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இரு வாலிபர்களை அப்பகுதியில் வைத்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் ஐதர்பேட்டை தெருவைச் சேர்ந்த அஜித், 22 மற்றும் காஞ்சிபுரம் கே.எஸ்.பி.,தெருவைச் சேர்ந்த ஆனந்தன், 23. ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை