மேலும் செய்திகள்
மறைமலை நகர் அருகே தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
23-May-2025
காஞ்சிபுரம்:மகளிர் நேய ஊராட்சி மற்றும் பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான களப்பயிற்சி முகாம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடந்தது.இந்த களப்பயிற்சி முகாமிற்கு, ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மைய உதவி இயக்குனர் திருமுருக பூங்குழலி முன்னிலை வகித்தார்.மகளிர் குழுக்களின் பங்களிப்பு, மகளிர் குழுவினரின் மேம்பாட்டிற்கு திட்டமிடல், மாற்றுத்திறனாளிகளுக்கான அக்கறை, சிறந்த நிர்வாக கொள்கை உள்ளிட்ட சிறந்து விளங்குவதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.இதில், மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி கோகுல், அரவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
23-May-2025