விழிப்புணர்வு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில், கீழம்பி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.ஊராட்சி தலைவர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில், உதவி திட்ட அலுவலர் உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி, வட்டார கல்வி அலுவலர் கண்ணன் ஆகியோர் கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என, வலியுறுத்தி பேசினர்.தொடர்ந்து மாணவ- - மாணவியர் கழிப்பறையின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்தனர்.கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 37 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்டுமானப் பணிக்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பள்ளி மாணவ- - மாணவியர் பங்கேற்ற பேரணியில், கழிப்பறை அவசியம் குறித்து கோஷங்களை எழுப்பியும், பதாகை ஏந்தியபடி முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.